கன்னி லக்னம் திருமண வாழ்க்கை மற்றும் கணவன் மனைவி அமையும் குறிப்புகள் | Kanni Lagnam Marriage Life in Tamil
கன்னி லக்னம்
பொதுவாக ராசிகளில் கன்னி, பெண் ராசி ஆகும்.
கன்னி லக்னக்காரர்களுக்கு அமையும் வாழ்க்கைத் துணை பற்றிய குறிப்புகள்
- கன்னி லக்னக்காரர்களுக்கு அமையும் வாழ்க்கைத் துணைவி மணப்பக்குவம் உடையவராக இருப்பார்.
- எதிலும் ரசனை உள்ளவர்.
- இறை பக்தியில் அதிக ஈடுபாடு கொண்டிருப்பார்.
- இரு பொருள்படும் விதமாக அதாவது இரட்டை அர்த்தங்களில் நகைச்சுவையாக பேசும் நபராக இருப்பார்.
கன்னி லக்னத்தில் பிறந்த ஆண்கள்
கன்னி லக்னத்தில் பிறந்த ஆண்களுக்கு லக்னத்தில் குரு இருந்தால் மனைவியானவள் தன் அன்பு, பாசம், ஆசை போன்றவற்றை வெளிப்படுத்தி கணவனை ஈர்க்கும் விதமாக நடந்து கொள்வார்.
லக்னத்தில் புதன் அமர்ந்து ஒன்பதாம் இடத்தில் குரு இருந்தால் அவர்களது விருப்பப்படி நல்ல வாழ்க்கைத் துணை அமையும்.
கன்னி லக்னத்தில் பிறந்த ஆண்களுக்கு லக்னத்தில் புதன் மற்றும் குரு இருந்தால் கணவனின் அன்பு முழுமையாக மனைவிக்கு கிடைக்க பெறும். வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
கன்னி லக்னத்தில் பிறந்த ஆண்களுக்கு இரண்டில் சுக்கிரன் இருந்து ஒன்பதாம் இடத்தில் குரு மற்றும் புதன் இணைந்து காணப்பட்டால் மணவாழ்க்கை சந்தோசமாக இருக்கும்.
கன்னி லக்னத்தில் பிறந்த ஆண்களுக்கு மிதுன ராசியில் குரு, புதன் இருந்தால் மனைவி படித்து நல்ல பதவியில் இருப்பார்.
கன்னி லக்னத்தில் பிறந்த ஆண்களுக்கு ஏழாம் இடத்தில் குரு உச்சமாக இருந்தால், கணவனை விட மனைவியின் செல்வாக்கு மிக அதிகமாக இருக்கும்.
கன்னி லக்னத்தில் பிறந்த ஆண்களுக்கு ஏழாம் இடத்தில் சுக்கிரன் உச்சமாக இருந்தால், மனைவியானவள் கலை உணர்வுடன் காணப்படுவாள். இது மட்டுமல்லாமல் அழகும் ஆடம்பரமும் கலந்து காணப்படுவர்.
கன்னி லக்னத்தில் பிறந்த ஆண்களுக்கு ஏழாம் இடத்திற்கு உரிய குரு பகவான் 3, 5, 6, 8, 12 ஆகிய எந்த இடத்தில் இருந்தாலும் மனைவிக்கு குறைபாடு இருக்கும். இது மட்டுமல்லாமல் முன்னேற்ற தடையும் ஏற்படும்.
கன்னி லக்னத்தில் பிறந்த ஆண்களுக்கு பன்னிரெண்டாம் இடத்திற்கு உரிய சூரியனுடன் குரு இணைந்திருந்தால் மனைவியால் வீண் செலவுகள் ஏற்படும்.
கன்னி லக்னத்தில் பிறந்த ஆண்களுக்கு எட்டில் சனி நீசம் பெற்றிருந்தால் ஆரோக்கிய பாதிப்பும் திருமண வாழ்வில் சிக்கல்களும் ஏற்படும்.
கன்னி லக்னத்தில் பிறந்த ஆண்களுக்கு செவ்வாய் எட்டில் இருந்தால் ஆரோக்கிய பாதிப்பு ஏற்படும்.
கன்னி லக்னத்தில் பிறந்த பெண்கள்
கன்னி லக்னத்தில் பிறந்த பெண்கள் இனிமையான மற்றும் சாதுரியமான பேச்சும், அழகும் கொண்டவராக இருப்பர்.
கன்னி லக்னத்தில் பிறந்த பெண்கள் ஜாதகத்தில் தனுசு ராசி அல்லது மீன ராசி அல்லது ரிஷப ராசி அல்லது மிதுன ராசி ஆகிய ஏதாவது ஒரு ராசியில் குரு இருந்தால் நல்ல ஆற்றல் நிறைந்த கணவன் அமைவார்.
கன்னி லக்னத்தில் பிறந்த பெண்கள் ஜாதகத்தில், ஏழாம் இடத்திற்கு உரிய குரு பகவான் கடகத்தில் உச்சம் பெற்றிருந்தால் நல்ல பண்புள்ள மற்றும் அழகுள்ள கணவனை அடையும் பாக்கியம் பெற்றிருப்பாள்.
கன்னி லக்னத்தில் பிறந்த பெண்கள் ஜாதகத்தில் இரண்டில் குரு மற்றும் ஏழில் சுக்கிரன் மற்றும் 11 இல் சந்திரன் மற்றும் பத்தில் புதன் இருந்தால் அறிவாற்றல் நிறைந்த கணவன் கிடைப்பார். மனைவியை நல்ல நிலையில் வைத்து அவளுக்கு பேரும் புகழும் கிடைக்க கணவன் ஏற்பாடு செய்வார்.
கன்னி லக்னத்தில் பிறந்த பெண்கள் ஜாதகத்தில் புதன் லக்னத்தில் இருந்து, சுக்கிரன் இரண்டாம் இடத்தில் அமர்ந்திருந்தால் குடும்ப வாழ்க்கை மற்றும் நிதிநிலை சீராக இருக்கும்.
கன்னி லக்னத்தில் பிறந்த பெண்கள் ஜாதகத்தில் மூன்றாம் இடத்தில் குரு இருப்பது நன்மை அல்ல.
கன்னி லக்னத்தில் பிறந்த பெண்கள் ஜாதகத்தில் ஏழாம் இடத்திற்கு உரிய குரு, பத்தாம் இடத்திற்கு உரிய புதனுடன் இணைந்து மிதுன ராசியில் இருந்தால் திருமணத்திற்குப் பின்பு கணவனின் அந்தஸ்து உயரும்.
கன்னி லக்னத்தில் பிறந்த பெண்கள் ஜாதகத்தில் ஏழாம் இடத்திற்கு உரிய குருவை விட புதன் ஜாதகத்தில் வலிமையாக காணப்பட்டால் மனைவி கணவனை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்.
கன்னி லக்னத்தில் பிறந்த பெண்களுக்கு லக்னத்தில் குரு அமர்ந்திருந்தால் அன்பான கணவன் அமைவார்.
கன்னி லக்னத்தில் பிறந்த பெண்களுக்கு லக்னத்தில் புதன் மற்றும் குரு இணைந்து இருந்தால் கணவன் மனைவி உறவு சிறப்பானதாக இருக்கும்.
கன்னி லக்னத்தில் பிறந்த பெண்கள் ஜாதகத்தில் நாலாம் இடத்தில் குரு அமர்ந்திருந்து பத்தாமிடத்தில் உள்ள புதனால் பார்க்கப்பட்டால் நல்ல நன்னடத்தையும் பண்பும் உடைய கணவன் அமைவார்.
கன்னி லக்னத்தில் பிறந்த பெண்களுக்கு லக்னத்தில் புதன் இருந்து, ஏழாம் இடத்தில் குரு இருந்தால் ஏற்றம் தரும் குடும்ப வாழ்க்கை அமையும்.
கன்னி லக்னத்தில் பிறந்த பெண்களுக்கு இரண்டாம் இடத்தில் குரு அமர்ந்திருந்தால் பண்புள்ள கணவன் கிடைப்பார்.
கன்னி லக்னத்தில் பிறந்த பெண்களுக்கு ஜாதகத்தில் ஒன்பதாம் வீட்டு அதிபதி சுக்கிரன் உடன் பத்தாம் அதிபதி புதன் கூடி லக்னம், ஏழாம் இடம், ஒன்பதாம் இடம், பத்தாமிடம், பதினொன்றாம் இடம் ஆகிய இடங்களில் ஏதேனும் ஒன்றில் இருந்தாலும் திருமணத்திற்குப் பின்பு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கன்னி லக்னத்தில் பிறந்த பெண்கள் ஜாதகத்தில் மீனத்தில் சுக்கிரன் அமர்ந்து, கடகத்தில் குரு அமர்ந்து சுக்கிரனை பார்த்தால் அந்தஸ்து உள்ள வாழ்க்கை துணை அமையும்.
வரன் அமையும் பெயரின் முதல் எழுத்து ➨ O,M,P,L,Y,S திருமணம் நடைபெறும் மாதம் ➨ தை, ஐப்பசி, கார்த்திகை, பங்குனி வரன் அமையும் திசை ➨ கிழக்கு, தெற்கு வரன் பிறந்த தினம் அல்லது வரன் அமையும் கிழமை ➨ புதன்,வெள்ளி |
கன்னி லக்னக்காரர்களுக்கு திருமண யோகம்
எப்போது திருமணம் நடக்கும் ?
சுக்கிர தசையில் குரு புக்தியிலும், குரு தசையில் சுக்கிர புக்தியிலும் திருமணம் நடைபெறும்.
ஜாதகத்தில் குரு பகவான் சுப கிரகத்தின் வீட்டில் இருந்தாலும் திருமணம் நடந்து விடும்.
ஜாதகத்தில் சுக்கிரன் மீன ராசியிலோ, ரிஷப ராசியிலோ, துலாம் ராசியிலோ இருக்கும்போது திருமணம் நடந்து விடும்.
கோட்ச்சாரத்தில் சுக்கிரன் தனுசு ராசியிலோ அல்லது மீன ராசியிலோ அல்லது மிதுன ராசியிலோ இருக்கும்போது, அவர் இருக்கும் வீட்டில் இருந்து 4 அல்லது 7 அல்லது 10 ஆகிய ஏதாவது ஒரு வீட்டில் சனி இருக்கும் போது திருமணம் நடந்து விடும்.
ஜாதகத்தில் சந்திரன் மற்றும் சுக்கிரன், குரு அமர்ந்திருக்கும் வீட்டின் அதிபதி, குரு அமர்ந்துள்ள நவாம்ச வீட்டின் அதிபதி ஆகியவர்களின் தசையிலோ அல்லது புக்தியிலோ திருமணம் நடைபெறும்.
வாலிபத் திருமணம் நடக்கும் ஜாதகம்
ஜாதகத்தில் குருவும் சுக்கிரனும் சேர்ந்து தனுசு ராசி அல்லது மீன ராசியிலோ இருந்தால் வாலிப வயதில் திருமணம் நடக்கும்.
கன்னி ராசிக்கு அருகில் அதாவது துலாம் ராசியில் சுப கிரகங்கள் இருந்தாலும் வாலிப வயதில் திருமணம் நடக்கும்.
திருமணத் தேதி எப்படி அமையும் ?
கோட்ச்சாரப்படி மீன ராசியை புதன் பகவான் கடக்கும் காலநிலையில் திருமணத் தேதி அமைந்து விடும்.
கோட்ச்சாரத்தில் புதன் மற்றும் வலுப்பெற்ற சுக்கிரன் சேர்ந்து இருந்தாலும் திருமணம் நடந்து விடும்.
கோட்ச்சாரத்தில் மீன ராசியில் ஏதாவது ஒரு சுப கிரகம் புதனோடு சேர்ந்து இருந்தாலும் திருமணம் நடந்து விடும்.
சிக்கல் நிறைந்த திருமண பந்தம்
சனி மற்றும் குரு கூடியிருக்க, சுக்கிரன் பாவ கிரகத்தின் இணைப்புடன் கன்னி ராசியில் இருந்தால், ஜாதகர் மாற்றான் மனைவி மீது ஆசைப்படுவார்.
திருமண வாழ்க்கையில் தடை ?
கன்னி லக்னத்தில் பிறந்த பெண்கள் ஜாதகத்தில் இரண்டாம் இடத்தில் சூரியன் நீசமானாலும், கன்னியில் சுக்கிரன் நீசமானாலும் திருமணம் நடைபெற தடை ஏற்படும் அல்லது திருமணம் நடந்தாலும் மண வாழ்க்கை திருப்திகரமாக இருக்காது.
இல்லற யோகம் உடைய ஜாதகம் ?
மீன ராசியில் சுபத்தன்மை உள்ள கிரகங்கள் அமர்ந்தாலும் சுபத்தன்மை உள்ள கிரகங்களால் பார்க்கப்பட்டாலும் நல்ல இல்லற வாழ்க்கை அமையும்.
குருவும் சுக்கிரனும் ஜாதகத்தில் நல்ல வீடுகளில் இருந்தால் நிம்மதியான இல்லற வாழ்க்கை அமையும்.
இரு தார யோகம்
சுக்கிரன் அல்லது குரு ஏதாவது ஒரு சுப கிரகங்களின் வீட்டில் இருந்து, அங்கு சுப கிரகங்களின் பார்வை ஏற்பட்டால் ஜாதகருக்கு உயிரோடு இரண்டு மனைவிகள் உண்டு.
குரு பகவானோடு சனியும் சேர்ந்தாலும் அல்லது ராகு சேர்ந்தாலும் இரண்டு மனைவிகள் உண்டு.
பல திருமண ஜாதகம் மற்றும் தார தோஷம்
ரிஷப ராசியில் குரு மற்றும் சந்திரன் சேர்ந்து இருக்க, அவர்களில் இருவரையும் ஏதாவது ஒரு சுப கிரகம் பார்த்தால் கட்டிய மனைவி இருக்கும்போதே பல திருமணங்களை நடத்தி விடுவார்கள்.
தார தோஷம் ஏற்பட்டால் பல மனைவிகள் ஜாதகருக்கு அமைவர்.
கடக ராசியிலோ அல்லது கன்னி ராசியிலோ அல்லது விருச்சக ராசியிலோ அல்லது மகர ராசியிலோ அல்லது மீன ராசியிலோ சுக்கிரன் இருந்து, அந்த ராசியின் அதிபதி தனது உச்ச வீட்டில் இருக்க, ஜாதகத்தில் குரு வலுவாக இருந்தால் தார தோஷம் ஏற்படும்.
குரு உச்சம் அடைந்தும், சந்திரன் ஆட்சி பலத்துடன் கடக ராசியில் அமர்ந்திருந்தாலும் தார தோஷம் ஏற்படும். இதனை உறுதி செய்ய திருமண ரேகையில் கரும்புள்ளி தோன்றும்.
ஜாதகத்தில் குரு இருக்கும் இடத்திற்கு 3வது இடத்தில் சந்திரன் அமைந்திருந்து, புதன் மிதுனத்தில் இருந்தால் தார தோஷம் ஏற்படும்.
மீன ராசியில் சனி இருந்தால் முதல் மனைவி ஆயுட்காலம் முழுவதும் நோயாளியாக இருப்பார். அவர் பிரிந்து ஜாதகருக்கு இரண்டாம் தாரம் ஏற்பட்டாலும் அவருக்கும் ஆரோக்கிய குறைபாடு இருந்து கொண்டே இருக்கும்.
சூரியன் மீனத்தில் இருந்தால் தார தோஷம் ஏற்படும்.
மேஷ ராசியில் புதன் இருக்க, மீன ராசியில் செவ்வாய் மற்றும் சனி மற்றும் சுக்கிரன் மூவரும் சேர்ந்து இருந்தால் தார தோஷம் ஏற்படும்.
விருச்சக ராசியில் சுக்கிரனும் சூரியனும் சேர்ந்து இருக்க, அவர்களை குரு பார்த்தால் தார தோஷம் ஏற்படும்.
ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் இடத்திற்கு ஏழாவது வீட்டில் சந்திரன் இருந்து, அந்த இடத்திற்கு ஏழாவது வீட்டில் புதன் இருந்து, மகர ராசியில் செவ்வாய் வலுத்துக் காணப்பட்டால் தார தோஷம் உண்டு.
ரிஷப ராசியிலோ அல்லது கடக ராசியிலோ அல்லது விருச்சக ராசியிலோ அல்லது கன்னி ராசியிலோ குருவும் சுக்கிரனும் சேர்ந்து இருந்தால் தார தோஷம் ஏற்படும்.
மேஷ ராசியில் புதன் மற்றும் சுக்கிரன் சேர்ந்திருக்க, துலாம் ராசியிலும் மற்றும் மீன ராசியிலும் பாவ கிரகங்கள் இருந்தால் தார தோஷம் உண்டு.
மீன ராசியில் ஒரு பாவ கிரகம் இருக்க, குரு ஒரு சுப கிரகத்தோடு மகரத்தில் இருந்தால் தார தோஷம் ஏற்படும்.
குரு ராகுவோடு சேர்ந்து கும்ப ராசியில் இருந்தால் தார தோஷம் ஏற்படும்.
சுக்கிரனோடு சூரியன் ரிஷபம், சிம்மம், விருச்சகம் ஆகிய ராசிகளில் இணைந்திருந்தால் ஜாதகருக்கு பல மனைவிகள் அமைவர். சுக்கிரனோடு புதன் கூடியிருந்தாலும் பல மனைவிகள் அமைவர்.
மூன்று மனைவிகள் உள்ள ஜாதகம்
சுக்கிரனும் செவ்வாயும் மற்றும் ராகுவும் சேர்ந்து மிதுன ராசி அல்லது கன்னி ராசி அல்லது மீன ராசிகளில் இருந்தால் மூன்று மனைவிகள் ஜாதகருக்கு அமைவர்.
கலப்புத் திருமணம்
குரு மற்றும் ராகு அல்லது குரு மற்றும் கேது இணைந்திருந்து, லக்னாதிபதி வலுத்திருந்தால் அந்த ஜாதகருக்கு கலப்புத் திருமணம் தான் அமையும். |
திருமணம் ஆகாத நிலை மற்றும் திருமணத்தில் சந்தேகம்
மீன ராசியில் செவ்வாயுடன் சனி கூடி இருந்தால் திருமணம் நடைபெறுவது கடினம்.
மீன ராசியில் சந்திரன் மற்றும் சுக்கிரன் இணைந்து காணப்படுவதும் திருமணம் இல்லாமையை உணர்த்தும்.
ஆண் ஜாதகத்தில் குரு மேஷத்தில் இருந்தால், திருமணம் புரியாமலேயே பல பெண்களோடு ஜாதகர் தொடர்பில் இருப்பார்.
மேஷ ராசியிலோ அல்லது சிம்ம ராசியிலோ அல்லது கும்ப ராசியிலோ புதனும் குருவும் இணைந்து காணப்பட்டால் திருமணம் இல்லாமையை உணர்த்தும்.
கும்ப ராசியில் குரு பகவானுடன் புதனும் செவ்வாயும் இணைந்திருந்தால் திருமணம் நடைபெறுவது கடினம்.
தாமதமான திருமண நிலை
பெண் ஜாதகத்தில் மிதுன ராசியிலோ அல்லது கன்னி ராசிலோ அல்லது சிம்ம ராசியிலோ சூரியன் மற்றும் செவ்வாய் சுபர் பார்வையற்று அமர்ந்திருந்து அவர்கள் இருவரையும் சனி பார்த்தால் அந்தப் பெண்ணிற்கு திருமணம் மிக மிக தாமதமாக நடைபெறும்.
பெண் ஜாதகத்தில் குரு மேஷ ராசியிலோ அல்லது சிம்ம ராசியிலோ அல்லது விருச்சக ராசியிலோ அல்லது கும்ப ராசியிலோ இருந்தால் தாமதமாக திருமணம் நடைபெறும்.
பெண் ஜாதகத்தில் கடக ராசியில் உச்ச பலம்பெற்ற குரு வக்கிரம் அடைந்தால் தாமதமாக திருமணம் நடைபெறும்.
செவ்வாய் கன்னி ராசியில் இருந்தாலும், கும்ப ராசியில் சனி மற்றும் சந்திரன் சேர்ந்து இருந்தாலும் தாமதமாக திருமணம் நடைபெறும்.
கும்ப ராசியில் ராகுவும் சந்திரனும் இணைந்திருந்தாலும் தாமதமாக திருமணம் நடைபெறும்.
தனுசு ராசியில் செவ்வாய் இருந்தாலும், கன்னி ராசியில் சுக்கிரன் இருந்தாலும், மீன ராசியில் செவ்வாய் இருந்தாலும் திருமணம் தாமதமாக நடைபெறும்.
செவ்வாயும் ராகுவும் இணைந்து மேஷ ராசியிலோ அல்லது விருச்சிக ராசியிலோ இருந்தால் திருமணத்தை தாமதப்படுத்தும்.
மீன ராசியில் செவ்வாய் இருக்க, சுக்கிரன் புதனின் நவாம்சத்தில் இருந்தாலும் திருமணம் தாமதமாக நடைபெறும்.
விருச்சக ராசியில் சுக்கிரனும் ரிஷப ராசியில் குருவும் அமர்ந்திருந்தால் தாமத திருமணம் நடைபெறும்.
சூரியன் மற்றும் சனி மற்றும் செவ்வாய் ஆகிய மூவரும் ஜாதகத்தில் எங்கு இணைந்து இருந்தாலும் திருமணம் தாமதமாக நடைபெறும்.
சூரியனும் சுக்கிரனும் இணைந்து ஒரே இடத்தில் இருந்தாலும் திருமணம் தாமதமாக தான் நடைபெறும்.
சிம்ம ராசியில் செவ்வாய் இருந்தாலும், கன்னி ராசியில் சூரியன் இருந்தாலும் திருமணம் தாமதமாக நடைபெறும்.
மீன ராசியில் சூரியன் இருக்க, செவ்வாய் அல்லது சனியுடன் சுக்கிரன் சேர்ந்திருந்தால் திருமணத்தை தாமதப்படுத்தும்.
ரிஷப ராசியிலோ அல்லது மிதுன ராசியிலோ அல்லது கன்னி ராசியிலோ அல்லது மகர ராசியிலோ குரு வக்ரம் பெற்றிருந்தால் திருமணம் தாமதமாக நடைபெறும்.
32 வயதை கடந்த திருமணம்
மகர ராசியில் சுக்கிரனும், தனுசு ராசியில் அல்லது மேஷ ராசியில் ராகுவும் இருந்தால் 32 வயதை கடந்த பின்பு திருமணம் நடைபெறும்.
இதையும் படிக்கலாமே