நவகிரகத்தினால் ஏற்படும் சகல தோஷங்களும் நீங்கி வாழ்க்கையில் வெற்றி பெற வைக்கும் அற்புத மந்திரங்கள் | Navagraha Gayatri Mantra in Tamil
நவகிரகத்தினால் ஏற்படும் அனைத்து தோஷங்களும் நீங்கி வாழ்க்கையில் மட்டுமல்லாமல் திருமண வாழ்வில் உள்ள தடைகளும் நீங்க தினசரி வாழ்க்கையில் நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரங்கள்
- நவகிரகத்தின் தோஷம் நீங்க நவகிரக காயத்ரி மந்திரங்களை பாராயணம் செய்வதால் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் வந்தடையும்.
சூரிய தோஷத்தில் இருந்து விடுபட நீங்கள் உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள்
சூரிய காயத்ரி மந்திரம்
ஓம் அஸ்வத் வஜாய வித்மஹே பாஸ ஹஸ்தாய தீமஹி தன்னோ சூர்ய பிரசோதயாத் |
ஜாதகப்படி ஒரு நபருக்கு சூரிய தசை அல்லது சூரிய புக்தி நடந்து கொண்டிருந்தால், அந்த ஜாதகர் ஞாயிற்றுக்கிழமை காலையில் கிழக்கு நோக்கி அமர்ந்து விரதம் இருந்து பகவான் சூரிய நாராயணன் படம் வைத்து செந்தாமரை மலர் தூவி கோதுமையால் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை படைத்து 24 முறை சூரிய காயத்ரி மந்திரத்தை உச்சரித்தால் சூரிய பகவானின் பரிபூரண அருளைப் பெற்று சூரிய தோஷத்திலிருந்தும் நீங்கள் விடுபடலாம்.
சந்திர தோஷத்திலிருந்து விடுபட நீங்கள் உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள்
சந்திர காயத்ரி மந்திரம்
ஓம் பத்மத் வஜாய வித்மஹே ஹேமரூபாய தீமஹி தன்னோ ஸோம பிரசோதயாத் |
ஜாதகப்படி ஒரு நபருக்கு சந்திர தசை அல்லது சந்திர புக்தி நடந்து கொண்டிருந்தால், அந்த ஜாதகர் திங்கட்கிழமை விரதம் இருந்து அம்பிகையின் படம் வைத்து,வெள்ளை அரளி மலர் தூவி பால் சாதம் படைத்து மேற்கண்ட சந்திர காயத்ரி மந்திரத்தை 24 முறை உச்சரித்தால் அம்பிகையின் பரிபூரண அருளைப் பெற்று சந்திரனால் வரும் அனைத்து தோஷத்திலிருந்தும் நீங்கள் விடுபடலாம்.
செவ்வாய் தோஷத்திலிருந்து விடுபட நீங்கள் உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள்
செவ்வாய் காயத்ரி மந்திரம்
ஓம் வீரத் வஜாய வித்மஹே விக்ன ஹஸ்தாய தீமஹி தன்னோ பௌம பிரசோதயாத் |
ஜாதகப்படி ஒரு நபருக்கு செவ்வாய் தசை அல்லது செவ்வாய் புக்தி நடந்து கொண்டிருந்தால், அந்த ஜாதகர் செவ்வாய்க் கிழமை விரதம் இருந்து முருகப்பெருமானின் படம் வைத்து, செண்பக மலர் தூவி, துவரையும் வெண் பொங்கலும் படைத்து மேற்கண்ட செவ்வாய் காயத்ரி மந்திரத்தை 27 முறை உச்சரித்தால் முருகப்பெருமானின் பரிபூரண அருளை பெற்று செவ்வாயினால் வரும் அனைத்து தோஷத்திலிருந்தும் நீங்கள் விடுபடலாம்.
புதன் தோஷத்திலிருந்து விடுபட நீங்கள் உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள்
புதன் காயத்ரி மந்திரம்
ஓம் கஜத் வஜாய வித்மஹே சுகஹஸ்தாய தீமஹி தன்னோ புத பிரசோதயாத் |
ஜாதகப்படி ஒரு நபருக்கு புதன் தசை அல்லது புதன் புக்தி நடந்து கொண்டிருந்தால், அந்த ஜாதகர் புதன் கிழமை விரதம் இருந்து பகவான் மகா விஷ்ணுவின் படம் வைத்து, வெண் காந்தள் மலர் தூவி, புளி சாதம் படைத்து மேற்கண்ட புதன் காயத்ரி மந்திரத்தை 24 முறை உச்சரித்தால் மகாவிஷ்ணுவின் பரிபூரண அருளைப் பெற்று புதனால் வரும் அனைத்து தோஷத்திலிருந்தும் நீங்கள் விடுபடலாம்.
- இந்த புதன் காயத்ரி மந்திரத்தை ஜாதகர் உச்சரித்தால் சிறந்த கல்வியாற்றலையும் அறிவையும் பெறலாம்.
குரு தோஷத்திலிருந்து விடுபட நீங்கள் உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள்
குரு காயத்ரி மந்திரம்
ஓம் விருஷபத் வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி தன்னோ குரு பிரசோதயாத் |
ஜாதகப்படி ஒரு நபருக்கு குரு தசை அல்லது குரு புக்தி நடந்து கொண்டிருந்தால், அந்த ஜாதகர் வியாழக்கிழமை விரதம் இருந்து பகவான் தட்சிணாமூர்த்தி அல்லது ராகவேந்திரர் படத்தை வைத்து, முல்லை மலர் தூவி கொண்டைக் கடலையுடன் தயிர் சாதம் படைத்து மேற்கண்ட குரு காயத்ரி மந்திரத்தை 24 முறை உச்சரித்தால் பகவானின் பரிபூரண அருளைப் பெற்று குருவால் வரும் அனைத்து தோஷத்திலிருந்தும் நீங்கள் விடுபடலாம்.
- இந்த குரு காயத்ரி மந்திரத்தை உச்சரித்தால் தனம், தானியம், தொழில் விருத்தி, கல்யாணம், சந்ததி விருத்தி போன்ற சுப நிகழ்வுகள் நடைபெறும்.
சுக்கிர தோஷத்திலிருந்து விடுபட நீங்கள் உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள்
சுக்கிரன் காயத்ரி மந்திரம்
ஓம் அச்வத் வஜாய வித்மஹே தனுர் ஹஸ்தாய தீமஹி தன்னோ சுக்ர பிரசோதயாத் |
ஜாதகப்படி ஒரு நபருக்கு சுக்கிர தசை அல்லது சுக்கிர புக்தி நடந்து கொண்டிருந்தால், அந்த ஜாதகர் வெள்ளிக்கிழமை விரதம் இருந்து ஸ்ரீ மகாலட்சுமியின் படம் வைத்து, வெண் தாமரை மலரிட்டு, நெய் சாதம் படைத்து மேற்கண்ட சுக்கிர காயத்ரி மந்திரத்தை 24 முறை உச்சரித்தால் மகாலட்சுமியின் பரிபூரண அருளைப் பெற்று சுக்கிரனால் வரும் அனைத்து தோஷத்திலிருந்தும் நீங்கள் விடுபடலாம்.
- இந்த சுக்கிர காயத்ரி மந்திரத்தை உச்சரித்தால் செல்வம் சேரும் மற்றும் திருமண தோஷம் அதாவது களத்திர தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.
திருமணப் பொருத்தம் பார்க்க க்ளிக் செய்யவும் | Thirumana Porutham Calculator |
சனி தோஷத்திலிருந்து விடுபட நீங்கள் உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள்
சனி காயத்ரி மந்திரம்
ஓம் காகத் வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி தன்னோ மந்த பிரசோதயாத் |
ஜாதகப்படி ஒரு நபருக்கு சனி தசை அல்லது சனி புக்தி நடந்து கொண்டிருந்தால், அந்த ஜாதகர் சனிக்கிழமை விரதம் இருந்து திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாளின் படம் வைத்து, கருங்குவளை மலர் தூவி, எள் சாதம் படைத்து மேற்கண்ட சனி காயத்ரி மந்திரத்தை 26 முறை உச்சரித்தால் ஸ்ரீ வெங்கடேச பெருமாளின் பரிபூரண அருளைப் பெற்று சனியால் வரும் அனைத்து தோஷத்திலிருந்தும் நீங்கள் விடுபடலாம்.
- இந்த சனி காயத்ரி மந்திரத்தை உச்சரித்தால் சனிபகவானால் ஏற்படும் அனைத்து தோஷங்களும் விலகி உங்களுடைய தொழிலில் விருத்தி ஏற்படும்.
ராகு தோஷத்திலிருந்து விடுபட நீங்கள் உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள்
ராகு காயத்ரி மந்திரம்
ஓம் நகத் வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி தன்னோ ராஹு பிரசோதயாத் |
ஜாதகப்படி ஒரு நபருக்கு ராகு தசை அல்லது ராகு புக்தி நடந்து கொண்டிருந்தால், அந்த ஜாதகர் வெள்ளிக்கிழமை விரதம் இருந்து துர்க்கை அம்மனின் படம் வைத்து, மந்தாரை மலர் தூவி, உளுந்து கலந்த சாதம் படைத்து மேற்கண்ட ராகு காயத்ரி மந்திரத்தை 27 முறை உச்சரித்தால் துர்க்கை அம்மனின் பரிபூரண அருளைப் பெற்று ராகுவால் வரும் அனைத்து தோஷத்திலிருந்தும் நீங்கள் விடுபடலாம்.
- இந்த ராகு காயத்ரி மந்திரத்தை உச்சரித்தால் ராகுவால் ஏற்படும் நாக தோஷம் விலகி திருமண வாழ்வில் நன்மை ஏற்படும்.
கேது தோஷத்திலிருந்து விடுபட நீங்கள் உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள்
கேது காயத்ரி மந்திரம்
ஓம் அஸ்வத் வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி தன்னோ கேது பிரசோதயாத் |
ஜாதகப்படி ஒரு நபருக்கு கேது தசை அல்லது கேது புக்தி நடந்து கொண்டிருந்தால், அந்த ஜாதகர் திங்கட்கிழமை விரதம் இருந்து ஸ்ரீ விநாயகப் பெருமானின் படம் வைத்து, பல்வகை மலர் தூவி, பல்வகை சாதம் படைத்து மேற்கண்ட கேது காயத்ரி மந்திரத்தை 27 முறை உச்சரித்தால் ஸ்ரீ விநாயகப் பெருமானின் பரிபூரண அருளைப் பெற்று கேதுவால் வரும் அனைத்து தோஷத்திலிருந்தும் நீங்கள் விடுபடலாம்.
THIRUMANA PORUTHAM | திருமணப் பொருத்தம் |
பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன எவ்வாறு கண்டறிவது பரிகாரம் உண்டா
பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன எவ்வாறு கண்டறிவது பரிகாரம் உண்டா
சொல்லவும்