உங்களுக்கு செவ்வாய் தோஷம் உள்ளதா கண்டுபிடிப்பது எப்படி ? செவ்வாய் தோஷம் விதிவிலக்குகள் மற்றும் செவ்வாய் தோஷம் பரிகாரம் என்ன ?
வணக்கம் நண்பர்களே,
இன்றைய பதிவில் நாம் காண இருப்பது, செவ்வாய் தோஷம் பற்றியதுதான். செவ்வாய் தோஷம் நம் ஜாதகத்தில் இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றியும் அதற்கான விதிவிலக்குகளை பற்றியும் மற்றும் செவ்வாய் தோஷத்திற்கான பரிகாரங்களைப் பற்றியும் நாம் இந்த பதிவில் பார்ப்போம்.
ஒரு சிலர் ஜோதிடத்தில் குறிப்பிட்ட பொது விதிகளை மட்டும் வைத்துக்கொண்டு தன்னுடைய ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கிறது என்று கருதுகிறார்கள் இது முற்றிலும் தவறானது. |
செவ்வாய் தோஷம் ஒரு ஜாதகத்தில் இருந்தாலும் அது நிவர்த்தி அடைந்து உள்ளதா அல்லது நிவர்த்தி அடையாமல் இருக்கிறதா என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு ஜோதிடம் மற்றும் வாழ்வியல் சார்ந்த பரிகாரங்களை செய்து செவ்வாய் தோஷத்தில் இருந்து முற்றிலுமாக விடுதலை பெறலாம்.
செவ்வாய் தோஷம் நம் ஜாதகத்தில் இருக்கிறதா அல்லது இல்லையா என்பதைப் பற்றி எப்படி தெரிந்து கொள்வது ?
Table of Contents
Toggleசெவ்வாய் தோஷம் எப்படி கண்டுபிடிப்பது ?
செவ்வாய் தோஷத்திற்கான பொது விதி
மணமக்களில் ஆண், பெண் இருவருக்கும் அவர்களது ஜாதகத்தில் லக்னத்திற்கு 2,4,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் அமையப்பெற்றிருந்தால் செவ்வாய் தோஷம் இருக்கிறது என்பது பொது விதியாக ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.
செவ்வாய் தோஷம் கால்குலேட்டர் | Sevvai Dosham Calculator in Tamil
செவ்வாய் தோஷம் எப்படி கண்டுபிடிப்பது ?
ஒரு நிமிடத்தில் தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே,
- எனது ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கிறதா அல்லது இல்லையா ?
- எனது ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்து அது நிவர்த்தி அடைந்து உள்ளதா ?
இதுபோன்ற உங்களது கேள்விகளுக்கு நமது செவ்வாய் தோஷம் கால்குலேட்டரை பயன்படுத்தி எளிதாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
செவ்வாய் தோஷம் கால்குலேட்டர் கிளிக் |
செவ்வாய் தோஷம் பற்றி தெரிந்து கொள்வது எப்படி ?
நண்பர்களே, உங்களது ஜாதகத்தை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் ராசி கட்டம் என்று ஒன்று இருக்கும். அதில் 12 கட்டங்களில் ஒரு கட்டத்தில் மட்டும் ல என்று எழுதப்பட்டு இருக்கும். அதுதான் லக்ன பாவகமாகும். லக்னம் என்பது நமது உயிரைக் குறிக்கிறது. இந்த லக்ன பாவகத்தை பற்றி விரிவாக அடுத்தடுத்த பதிவுகளில் பார்ப்போம்.
அந்த லக்ன பாவகத்திலிருந்து ஒரு சில இடங்களில் செவ்வாய் அமைந்திருந்தால் செவ்வாய் தோஷம் உண்டு என்று ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. அது என்னென்ன இடங்கள் என்பதைப் பற்றி கீழே கொடுத்துள்ளேன். அந்த விதிகளை வைத்து நீங்கள் செவ்வாய் தோஷத்தை அறிந்து கொள்ளலாம்.
செவ்வாய் தோஷத்திற்கான சிறப்பு விதி
ஆண் ஜாதகத்தில் லக்னத்திற்கு 2,7,8 ஆகிய இடங்களில் செவ்வாய் அமையப்பெற்றிருந்தால் செவ்வாய் தோஷம் உண்டு என்பது சிறப்பு விதி. |
பெண் ஜாதகத்தில் லக்னத்திற்கு 4,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் அமையப்பெற்றிருந்தால் செவ்வாய் தோஷம் உண்டு என்பது சிறப்பு விதி. |
செவ்வாய் தோஷம் விதிவிலக்குகள் அல்லது செவ்வாய் தோஷம் நிவர்த்தி
செவ்வாய் தோஷம் நிவர்த்திக்கான சிறப்பு விதிகள்
லக்னத்திற்கு 2 ஆம் இடத்தில் செவ்வாய் இருந்து அது மிதுனம் மற்றும் கன்னி ராசியாக அமையப்பெற்று இருந்தால் செவ்வாய் தோஷம் நிவர்த்தி.
லக்னத்திற்கு 4 ஆம் இடத்தில் செவ்வாய் இருந்து அது மேஷம் மற்றும் விருச்சகம் ராசியாக அமையப்பெற்றிருந்தால் செவ்வாய் தோஷம் நிவர்த்தி.
லக்னத்திற்கு 7 ஆம் இடத்தில் செவ்வாய் இருந்து அது மகரம் மற்றும் கடகம் ராசியாக அமையப்பெற்றிருந்தால் செவ்வாய் தோஷம் நிவர்த்தி.
லக்னத்திற்கு 8 ஆம் இடத்தில் செவ்வாய் இருந்து அது தனுசு மற்றும் மீன ராசியாக அமையப் பெற்றிருந்தால் செவ்வாய் தோஷம் நிவர்த்தி.
லக்னத்திற்கு 12 ஆம் இடத்தில் செவ்வாய் இருந்து அது ரிஷபம் மற்றும் துலாம் ராசியாக அமையப்பெற்றிருந்தால் செவ்வாய் தோஷம் நிவர்த்தி.
மேற்கண்ட விதிகளை வைத்து நீங்கள் உங்களது ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் நிவர்த்தி அடைந்து உள்ளதா என்பதை அறிந்து கொள்ளலாம். இது மட்டுமல்லாமல் இன்னும் சில விதிகளை கூறுகிறேன் தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களது ஜாதகத்தில் மேஷம், சிம்மம், விருச்சகம், மகரம், கும்பம் ஆகிய ராசிகளில் செவ்வாய் அமைந்திருந்தால் செவ்வாயினால் ஏற்படும் எந்த தோஷமும் உங்களுக்கு இல்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
கடகம் மற்றும் சிம்மம் லக்னங்களில் பிறந்தவர்களுக்கு செவ்வாயினால் வரும் எந்த தோஷமும் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
உங்களது ஜாதகத்தில் ஒரு சில கிரகங்களுடன் செவ்வாய் அமைந்திருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். வாருங்கள் நண்பர்களே, எந்தெந்த கிரகங்களுடன் செவ்வாய் இணைந்திருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை என்பதைப் பற்றி பார்ப்போம்..
குரு பகவானுடன் செவ்வாய் இருந்தாலும் குரு பார்த்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.
சந்திரனுடன் செவ்வாய் இருந்தாலும் சந்திரன் பார்த்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.
சூரியனுடன் செவ்வாய் இருந்தாலும் சூரியன் பார்த்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.
புதனுடன் செவ்வாய் இருந்தாலும் புதன் பார்த்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.
நண்பர்களே, இது மட்டுமல்லாமல் இன்னும் சில செவ்வாய் தோஷத்திற்கான விதிவிலக்குகள் இருக்கின்றன அதைப் பற்றியும் சொல்கிறேன் தெரிந்து கொள்ளுங்கள்..
மணமக்களில் ஆண் அல்லது பெண் ஜாதகத்தில் செவ்வாய் அமைந்துள்ள ராசியின் அதிபதி அவர்களது லக்னத்திற்கு 1,4,5,7,9,10 ஆகிய வீடுகளில் அமையப்பெற்றிருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
செவ்வாயின் ஆட்சி வீடுகளாக இருக்கும் மேஷம் மற்றும் விருச்சிக ராசியில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். அது மட்டுமல்லாமல் செவ்வாயின் உச்ச வீடு மகர ராசி ஆகும். இந்த மகர ராசியில் செவ்வாய் இருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
செவ்வாயின் நட்பு கிரகங்களாக இருக்கும் சூரியன், சந்திரன், குரு இவர்களின் வீடான சிம்ம ராசி, கடக ராசி, தனுசு ராசி மற்றும் மீன ராசி ஆகிய ராசிகளில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
செவ்வாய் தோஷம் பரிகாரங்கள்
செவ்வாய் தோஷத்திற்கான வாழ்வியல் பரிகாரங்கள்
செவ்வாய் தோஷத்திற்கு முடிந்த வரையில் செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகத்தை சேர்ப்பதே நல்லது.
மணமக்களில் ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருந்து மற்றவருக்கு செவ்வாய் தோஷம் இல்லை எனில், செவ்வாய் தோஷம் இருப்பவர் உணர்ச்சிவசப்பட்டு பேசும்போது எதிரில் இருப்பவருக்கு மிகவும் கோபத்தை உண்டு செய்யும். இதனால் மணமக்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் போவதற்கும் வீண் பிரச்சனைகளை ஏற்படுத்தவும் நிறைய வாய்ப்புகள் உள்ளது.
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் புளி சாதம் மற்றும் புளிப்பு தன்மை அதிகம் உள்ள உணவுப் பொருட்களை குறைவாக சேர்ப்பது நல்லது.
நிலம் சார்ந்த விஷயங்கள், சகோதர சகோதரி சார்ந்த விஷயங்களில் நேர்மறையான அணுகு முறையை நீங்கள் வைத்துக் கொண்டால் செவ்வாய் தோஷத்தின் வீரியத்தை குறைக்கலாம்.
அதேபோல் முடிந்த வரையில் ரத்த தானம் செய்யுங்கள் மற்றும் விபத்தில் சிக்கியவருக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். இதுவும் செவ்வாய் தோஷத்தின் வீரியத்தை குறைக்கும்.
பூர்வீகம் சார்ந்த சொத்து பிரிவினையில் சகோதர சகோதரிகளையும் மற்றும் பெற்றோரையும் ஏமாற்றி அபகரிக்க முயற்சி செய்யாதீர்கள். இது செவ்வாய் பகவானின் கோபத்தை மேலும் அதிகரிக்க செய்யும்.
நீங்கள் வாங்கும் முதல் சொத்தை நிலமாக வாங்காமல் கட்டிய கட்டடமாக வாங்குவது நன்மை பயக்கும்.
ஒரு நிறுவனத்தையோ அல்லது ஏதேனும் ஒரு தொழிலையோ நீங்கள் செய்பவராக இருந்தால், உங்களது தொழிலாளிக்கு அவருக்கான கூலியை அல்லது ஊதியத்தை முறையாக வழங்கி விடுங்கள். இல்லையெனில் செவ்வாய் பகவானின் கோபத்திற்கு ஆளாகி விடுவீர்கள்.
காவல்துறை, ராணுவத்துறை, மருத்துவத்துறை போன்ற பணியில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பும் உங்களால் முடிந்த உதவியையும் செய்வது நன்மை பயக்கும்.
செவ்வாய் தோஷத்திற்கான ஆன்மீக பரிகாரங்கள்
ஊர் எல்லையில் இருக்கும் காவல் தெய்வங்களுக்கு செம்பருத்தி மற்றும் விருட்சிப்பூ சாத்தி வணங்கி வாருங்கள்.
உங்களது வீட்டில் வில்வம், வன்னி மரக்கன்றுகள் நட்டு பராமரியுங்கள்.
செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபாடு செய்வது நன்மை பயக்கும். முருகப்பெருமானின் அருளால் செவ்வாய் தோஷம் பாதிப்பு குறைந்து உங்களது வாழ்க்கை மேம்படும்.
முருகப்பெருமானுக்கு சிவப்பு மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்கி வாழ்க்கை மேம்படும்.
விநாயகருக்கு செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி நாளில் அபிஷேக ஆராதனை செய்து விரதம் இருப்பது நன்மை பயக்கும். இவ்வாறு 41 செவ்வாய்க்கிழமைகள் விரதம் இருக்க செவ்வாய் தோஷத்தின் பாதிப்பு குறையும்.
நவகிரகத்தில் இருக்கும் செவ்வாய் பகவானுக்கு உங்களது பிறந்த தேதி அல்லது நீங்கள் பிறந்த கிழமைகளில் அர்ச்சனை செய்து வழிபட்டால் நன்மை உண்டாகும்.
நவகிரகத்தில் உள்ள செவ்வாய் பகவானுக்கு 27 செவ்வாய்க்கிழமைகள் நெய் விளக்கு ஏற்றி வந்தால் செவ்வாய் தோஷம் நீங்கும்.
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் ரத்தக் கல் பதித்த தங்க மோதிரத்தை மோதிர விரலில் வலது கையில் அணிவது நன்மை பயக்கும்.
செவ்வாய்க்கிழமையில் வரும் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் துவரை தானம் செய்தால் செவ்வாயின் தாக்கம் குறைந்து நன்மை உண்டாகும்.
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய் காயத்ரி மந்திரம், தியான மந்திரம், சூரியக்கவசம் போன்ற மந்திரங்களை சொல்லி கடவுளை மனம் உருகி வழிபட்டு வந்தால் செவ்வாய் தோஷம் நீங்கும்.
இதையும் படிக்கலாமே
நவகிரகத்தினால் ஏற்படும் சகல தோஷங்களும் நீங்கி வாழ்க்கையில் வெற்றி பெற வைக்கும் அற்புத மந்திரங்கள் |
THIRUMANA PORUTHAM | திருமணப் பொருத்தம் |
1 thought on “உங்களுக்கு செவ்வாய் தோஷம் உள்ளதா கண்டுபிடிப்பது எப்படி ? செவ்வாய் தோஷம் விதிவிலக்குகள் மற்றும் செவ்வாய் தோஷம் பரிகாரம் என்ன ?”
Super